×

மாணிக்கநாச்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

திருப்புத்தூர், ஏப்.20: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டப்பட்டு துவங்கியது. திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 8 மணியளவில் கொடிமரத்திற்கும், குருக்களுக்கும் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து மாணிக்க நாச்சி அம்மனுக்கும், கொடிமரத்திற்கும் பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க நாச்சி அம்மன் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு பூதகி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து 2ம் திருநாள் முதல் 7ம் திருநாள்வரை தினந்தோறும் காலையில் கேடகத்திலும், இரவு சிம்மம், அன்னம், காமதேனு, யானை, ரிஷப, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 8ம் நாள் திருவிழாவான 26ம் தேதி தேரோட்டம் நடைபெறும். 9ம் நாள் திருவிழாவான ஏப்.27ம் தேதி காலை 9 மணியளவில் தெற்குப்பட்டு மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று பூக்குழி இறங்கும் விழா நடைபெறும். இரவு அம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி நடைபெறும். 10ம் நாள் திருவிழாவான ஏப்.28ம் தேதி  நாட்டார் நடத்தும் மஞ்சுவிரட்டு நடைபெறும்.

Tags : Chithirai Festival ,Manikkanachchi Amman Temple ,
× RELATED வீரபாண்டி சித்திரை திருவிழாவில் ...